டெல்லியில் முடிமாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட இளைஞர் உயிரிழப்பு - 4 பேர் உயிரிழப்பு

Delhi Death
By Thahir Dec 03, 2022 08:31 AM GMT
Report

டெல்லியில் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளைஞர் உயிரிழந்தார்.

இளைஞர்  முடிமாற்று அறுவை சிகிச்சை

டெல்லியை சேர்ந்த ஆதர் ரஷித் என்ற 30வயது இளைஞர் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

இவர் தனது தலையில் உள்ள முடிகள் கொட்டுவதால் வழுக்கை தலை தனது அழகை குறைப்பதாக எண்ணி கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள ஒரு கிளினிக்கின் விளம்பரத்தை பார்த்து அங்கு சென்று முடிமாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

இந்த நிலையில், ரஷீத் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்து சில நாட்களிலேயே செப்சிஸ் எனப்படும் பாக்டீரியா கிருமி தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால் அவரது தலையில் வீக்கம் பரவ தொடங்கி பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வந்துள்ளார். இதன் காரணமாக அவரது சிறுநீரகம் செயலிழந்து விட்டது. பின் இதர உறுப்புகளும் படிப்படியாக செயலிழந்து வந்ததாக அவரது தாயார் கூறுகிறார்.

உயிரிழப்பு - 4 பேர் கைது 

ஒரு கட்டத்தில் ரஷீத்தின் நிலை மிகவும் மோசமானதை எடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Death of young man undergoing hair transplant - 4 dead

ரஷீத் அறுவை சிகிச்சை மேற்கொண்ட கிளினிக்கின் மீது காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனை அடுத்து அறுவை சிகிச்சை அளித்த இருவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.