ஐக்கிய அரபு அமீரக அதிபர் மரணம் : பிரதமர் மோடி இரங்கல்

3 நாட்கள் முன்

ஐக்கிய அரபு அமீரக அதிபர் மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரக அதிபர் சேக் கலீபா பின் சயத் அல் நகியான் (73) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

இவர் 2004-ஆம் ஆண்டு முதல் முக்கிய அரபு அமீரக அதிபராக வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில், பிரதமர் மோடி அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் : 

இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் சிறந்த அரசியல்வாதி மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான். இந்திய மக்களின் இதயப்பூர்வமான இரங்கல்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மக்களுடன் எப்போதும் இருக்கிறது என பதிவிட்டு்ள்ளார்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.