காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் உயிரிழப்பு - உறவினர்கள் புகார்
காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணை கைதி உயிரிழப்பு
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.
இதையடுத்து கடந்த 21 ஆம் தேதி ஓட்டேரி போலீசார் விசாரணைக்காக ஆகாஷை அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது காவல் நிலையத்தில் ஆகாஷ் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியானது.
முன்னதாக கீழ்பாக்கம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக ஆகாஷ் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் உயிரிழந்துவிட்டதாக உறவினர்களிடம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் விடிய விடிய காவல்துறையினர் தாக்கியதால் தான் ஆகாஷ் இறந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து மாஜிஸ்திரேட் லட்சுமி விசாரணை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.