திரையுலகில் தொடரும் சோகம் : பிரபல காமெடி நடிகர் மரணம்

 இந்த கொரோனா காலக்கட்டத்தில் சினிமா பிரபலங்கள் பலர் உயிரிழந்தது வருவது சினிமா துறையிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த மாதம் காமெடி நடிகர் விவேக் மாரடைப்பால் காலமானார். அவரை தொடர்ந்து நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனோவால் காலமானார், இயக்குனர் கே.வி.ஆனந்த் கொரோனா தொற்று ஏற்பட்டு மாரடைப்பால் உயிரிழந்தார்.

அதற்கு பிறகு நடிகர் நெல்லை சிவா மராடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவர்களின் அடுத்தடுத்த மரணங்கள் சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்து வருகிறது.

இந்த சோகமெல்லாம் ஆறும் நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினிமுருகன், போன்ற படங்களில் நடித்த நடிகர் மற்றும் உதவி இயக்குனருமான பவுன்ராஜ் மாரடைப்பால் காலமானார். 

திரையுலகில் அடுத்தடுத்து மரணங்கள் ஏற்படுவது தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்