கள்ளழகரை வணங்க வந்த இளைஞருக்கு அரிவாள் வெட்டு ? - பரபரப்பில் மதுரை
மதுரை கள்ளழகரை பார்க்க வந்த இளைஞர் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
சித்திரை திருவிழா
உலக பிரசித்தி பெற்ற மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவை காண மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர்.
விழாவில் பலி
இந்த நிலையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை பார்க்க வந்த மதுரை எம்.கே.புரம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற 23 வயது இளைஞர் ராமராயர் மண்டகப்படி அருகில் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானாரா? அல்லது கொலையா? என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக நேற்று நள்ளிரவு சூர்யா கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதை பார்ப்பதற்காக தனது நண்பர்களுடன் வந்துள்ளார். அதிகாலை 4 மணி அளவில் மதுரை ராமராயர் மண்டகப்படி அருகே சென்று கொண்டிருந்த போது, அந்த பகுதியில் அரிவாள்களுடன் வலம் வந்த இளைஞர்கள் சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டது போல் தெரிகிறது. அப்போது அந்த இளைஞர்கள் சூர்யாவையும் அவரது நண்பர்களையும் தாக்கியுள்ளனர். இதானல் அந்த இளைஞர் உயிரிழந்திருக்கலாம் என போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.