மேலும் ஒரு திரைப்பிரபலம் மரணம் - சோகத்தில் திரையுலகம்

cinema chelladurai celebrit
By Irumporai Apr 30, 2021 05:45 AM GMT
Report

ரஜினி, விஜய், தனுஷ் ஆகிய முன்னணி நடிகர்களுடன் நடித்த மூத்த நடிகர் செல்லதுரை காலமானார். அவருக்கு வயது 84. கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்து தமிழ் திரையுலகன் சோகத்தில் உள்ளது என்றே கூறவேண்டும்.

கடந்த ஆண்டு எஸ்.பி.பி, இந்த ஆண்டு விவேக், தாமிரா, ஜனநாதன் உள்ளிட்ட பலருடன் தற்போது நடிகர் செல்லத்துரை மறைந்துள்ளார்.

சென்னையில் வசித்து வந்த நிலையில் செல்லத்துரை  வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் நடிகர் விஜய் உடன் கத்தி, தெறி, தனுஷின் மாரி, ரஜினிகாந்தின் சிவாஜி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் செல்லத்துரை திடீரென உயிரிழந்ததை அடுத்து திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படஉள்ளது.