சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா காலமானார்!
death-mourning
By Nandhini
1974 பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ரஞ்சித் சின்ஹா உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
1974 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான சின்ஹா மத்திய புலனாய்வுப் பிரிவின் தலைவராக டிசம்பர் 2012 முதல் டிசம்பர் 2014 வரை இருந்து வந்தார்.
அதனையடுத்து, ஐ.டி.பி.பி இயக்குநர் ஜெனரல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளையும் சின்ஹா வகித்திருக்கிறார். இந்நிலையில், 64 வயதாகும் சின்ஹாவின் உடல்நலக்குறைவால் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.