தோண்ட தோண்ட வரும் பிணங்கள் - உயரும் உயிரிழப்புகள்...துருக்கியில் கேட்கும் மரண ஓலங்கள்
துருக்கியில் கட்டிட இடிபாடுகளை தோண்ட தோண்ட சடலங்கள் வருவதால் மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
கிழக்கு துருக்கியின் காஸியன்டெப் நகரை மையமாக கொண்டு திங்கள்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான நிலையில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் துருக்கி மற்றும் சிரியா நிலைகுலைந்தது.

அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் நகரில் இருந்த ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அதிகாலை நிகழ்ந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் பலரும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
இடிபாடுகளை தோண்ட தோண்ட வரும் சடலங்கள்
தற்போது வரை சுமார் துருக்கி மற்றும் சிரியாவில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,383 ஆக அதிகரித்துள்ளது. துருக்கியில் மட்டும் 12, 391 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் 2992 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இடிபாடுகளை அகற்ற அகற்றி மனித சடலங்கள் தென்படுவதால் மீட்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.