இப்படி ஒரு கேட்ச் பிடிச்சி பாத்துருக்கீங்களா? - மகளிர் உலகக்கோப்பையில் அசத்திய வீராங்கனை

ENGvWI womensworldcup2022 DeandraDottin
By Petchi Avudaiappan Mar 09, 2022 07:21 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

மகளிர் உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை கேட்ச் பிடித்த வீடியோ  இணையத்தில் வைரலாகியுள்ளது.     

நியூசிலாந்தில் மகளிர் உலகக்கோப்பை  தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டி ஒன்றில் வெஸ்ட் இண்டீஸ்-இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்தது. 

தொடர்ந்து பேட் செய்த இங்கிலாந்து அணிக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி தரமான பதிலடி கொடுத்ததில் 47.4 ஓவர்களில் அந்த அணி 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில்  வெஸ்ட் இண்டீஸ் அணி  த்ரில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை பிடித்த கேட்ச் ஒன்று கிரிக்கெட் ரசிகர்களை மிரள வைத்தது. இங்கிலாந்து அணி வீராங்கனை வின்ஃபில்ட் ஹில் 5வது ஓவரில் வீசிய பந்தை பாயிண்ட் திசையில் திருப்பி அடிக்க முயன்றார். அப்போது அந்த திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை டியாண்டிரா டாட்டின் தலைக்கு மேலே சென்றது. 

எப்படியும் பந்து பவுண்டரி சென்று விடும் என நினைத்த அனைவருக்கும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அமைந்தது. ஆம் டியாண்டரா பந்தை அசால்ட்டாக கேட்ச் பிடித்து அனைவரையும் அசர வைத்தார். ஐசிசியும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த கேட்ச் வீடியோவை பதிவிட்டு இந்த தொடரின் சிறப்பான கேட்ச்களில் ஒன்று இது எனக் கூறி பாராட்டியுள்ளது.