கோவிட்டை விட ஆபத்தான வைரஸ்கள் ஆய்வகத்திலிருந்து மாயம் - மக்களின் உயிருக்கு ஆபத்தா?

COVID-19 Australia Virus
By Karthikraja Dec 12, 2024 01:00 PM GMT
Report

ஆய்வகத்திலிருந்து 300க்கும் மேற்பட்ட வைரஸ்களின் மாதிரிகள் காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைரஸ்கள் மாயம்

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்த் மாகாணத்தில் 300க்கும் மேற்பட்ட குப்பிகளில் இருந்த உயிர்கொல்லி வைரஸ்களின் மாதிரிகள் காணாமல் போனதாக அரசு அறிவித்துள்ளது. 

australia virus missing

ஹெண்ட்ரா வைரஸ், ஹான்டா வைரஸ் மற்றும் லைசா வைரஸ் உள்ளிட்ட வைரஸ்கள் இருந்த 323 குப்பிகள் காணமல் போனதாகத் தெரிவித்துள்ளனர்.

கோவிட்டை விட வீரியம்

காணமல் போன சில ஹான்டா வைரஸ்கள் கோவிட்டை விட அதிகமாக 15% வரை இறப்பு விகிதம் கொண்டவை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் ஹெண்ட்ரா வைரஸ் என்பது விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு தொற்றும் வைரஸ். இது ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படுகிறது. லைசா வைரஸ் என்பது ரேபிஸை ஏற்படுத்தும் வைரஸ் வகையாகும். ஹாண்டா வைரஸ்கள் என்பது கடுமையான நோய் மற்றும் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்களின் குடும்பமாகும். 

australia virus missing

வைரஸ்கள் காணாமல் போன ஆய்வகத்தில், வைரஸ்களை வைத்து நோய்களைக் கண்டறிதல், கண்காணித்தல் மற்றும் ஆய்வு செய்தல் பணிகளில் இருந்ததாகவும், கொசு மூலம் பரவும் நோய்க்கிருமிகள் குறித்த ஆய்வுகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும் கூறியிருக்கின்றனர்.

விசாரணை

இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலிய அமைச்சர் திமோதி நிக்கோல்ஸ் , "உயிரியல் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறுவதும், தொற்று வைரஸ் மாதிரிகள் காணாமல் போவதும் மிகவும் தீவிரமான விஷயம். இது மீண்டும் நடக்காதவாறு சுகாதாரத் துறை இது குறித்து விசாரிக்க வேண்டும்." என்று தெரிவித்தார்.

இந்த வைரஸ்கள் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வைரஸ்கள் திருடப்பட்டதா, வேறு எங்கும் கொண்டு செல்லப்பட்டதா அல்லது அழிக்கப்பட்டதா இதான் பின்னணியில் உள்ளது யார் என கேள்விகள் எழுந்துள்ளது. 

australia virus breach outbreak

குளிரூட்டப்பட்ட அறைக்கு வெளியே வைரஸ்களின் வீரியம் விரைவாக குறைந்துவிடும் என்பதால் அதிக பாதிப்பு ஏற்படாது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.