இலங்கையை கொடிய பஞ்சம் தாக்குவது உறுதி? உடனே சிறுதானியங்களை பயிரிட பிரதமர் உத்தரவு..!

Ranil Wickremesinghe Sri Lanka
By Thahir May 21, 2022 07:00 AM GMT
Report

இலங்கையை கொடிய பஞ்சம் தாக்க உள்ளதால் உடனே சிறுதானியங்களை பயிரிடுமாறு நாட்டு மக்களை ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். பொருளாதாரத்தை மீண்டெடுக்கும் முயற்சியில் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், முதன் முறையாக 606 கோடி ரூபாயை கடன் தவணையை கட்ட முடியாமல் இலங்கை தவறியுள்ளது.

இலங்கையை கொடிய பஞ்சம் தாக்குவது உறுதி? உடனே சிறுதானியங்களை பயிரிட பிரதமர் உத்தரவு..! | Deadly Famine Strikes Sri Lanka

கடனை திரும்பி செலுத்த சலுகை காலமான ஒரு மாத காலமும் முடிந்துள்ளதால் பொருளாதாரத்தில் இலங்கை திவாலாகிவிட்டதாக நேற்று முன்தினம் அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் அறிவித்திருந்தார்.

இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் இலங்கை தனது செல்வாக்கை இழக்க தொடங்கியுள்ளது. இதன் மூலம் சர்வதேச கடன் சந்தையில் கடன் வாங்குவது,இனி இலங்கைக்கு குதிரை கொம்பாக இருக்கும்.

இதனால் இலங்கையில் உணவு பற்றாக்குறை நிலவ தொடங்கி இருப்பதால் மிக விரைவில் பெரிய அளவிலான உணவு பஞ்சம் நிலவும் என்று அஞ்சப்படுகிறது.

இலங்கையை கொடிய பஞ்சம் தாக்குவது உறுதி? உடனே சிறுதானியங்களை பயிரிட பிரதமர் உத்தரவு..! | Deadly Famine Strikes Sri Lanka

பஞ்சத்தில் இருந்த தற்காத்துக் கொள்ள இலங்கை மக்கள் சிறுதானியங்களை உடனே பயிரிவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

உலகில் இந்த ஆண்டிலேயே உணவில்லாமல் பஞ்சத்தில் அடிபடும் நாடுகளில் இலங்கையும் இருக்கும் என்று ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார். பஞ்சப் பட்டியலில் ஆப்கானும் அடங்கும என்று ஐ.நா.வின் உணவு,வேளாண் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.