சமையல் எரிவாயு சிலிண்டருக்கான eKyc அவகாசம் நீட்டிப்பு
LPG cylinder
By Fathima
சமையல் எரிவாயு சிலிண்டருக்கான eKyc அவகாசம் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தம் நுகர்வோர் eKyc மேற்கொள்ள வேண்டும் என்ற நடைமுறை கட்டாயமாக்கப்பட்டது.
இதற்காக நேற்று வரை காலக்கெடு வழங்கப்பட்ட நிலையில், 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்தபடியே மொபைல் ஆப் மூலமாகவும், கேஸ் ஏஜென்ஸிக்கு நேரில் சென்றோ இதனை செய்ய முடியும்.
போலி எரிவாயு இணைப்புகளை கண்டறியவும், தகுதியான நபர்களுக்கு மானியம் வழங்குவதை உறுதி செய்யவும் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 23ம் தேதிக்குள் இதனை செய்யாவிட்டால் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் வரலாம் என்பது கூடுதல் தகவல்.
