Saturday, Jul 5, 2025

இறந்து போன முதியவரை சுற்றி கிடந்த 125 விஷப் பாம்புகள் - அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்

america deadbodyaroundbysnakes
By Petchi Avudaiappan 3 years ago
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

அமெரிக்காவில் மர்மமான முறையில் இறந்து கிடந்த முதியவரை மீட்க சென்ற போலீஸ் அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. 

அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள சார்லஸ் கவுண்டியில் வசித்துவந்த 49 வயது முதியவர் இரண்டு நாட்களாக வீட்டைவிட்டு வெளியே வராமலும், வீட்டிற்குள் ஆள் நடமாட்டம் இல்லாமலும் இருந்துள்ளது. 

இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது அந்த முதியவர் மயங்கி கீழே விழுந்து கிடந்துள்ளார். அந்த நபரை சுற்றி 14 அடி மஞ்சள் பர்மிய மலைப்பாம்பு உட்பட 125க்கு மேற்பட்ட விஷ பாம்புகள் உயிருடன் இருந்துள்ளது.  

இதனையடுத்து இறந்தவர் தனது வீட்டில் மலைப்பாம்பு, பாம்பு, நாகப்பாம்பு, கருப்பு மாம்போ உள்ளிட்ட பல்வேறு வகையான பாம்புகளை வளர்த்து வந்ததாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிவித்தனர்.மேரிலாந்து சட்டத்தின்படி பாம்பை வீட்டில் யாரும் செல்லப் பிராணியாக வளர்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.