மெக்டொனால்டு சிக்கனில் இறந்து கிடந்த சிலந்தி - உணவை ஆர்டர் செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

london england burger mc donalds dead spider police enquire
By Swetha Subash Jan 28, 2022 07:49 AM GMT
Report

இங்கிலாந்தின் லண்டனில் சேஷிர் கவுண்டியை சேர்ந்த 21 வயதான கேட்டி மோஸ் என்ற பெண் சில தினங்களுக்கு முன்னர் மெக்டொனால்டு உணவகத்தில் இருந்து சிக்கன், சிப்ஸ் மற்றும் பர்கர் போன்ற உணவுகளை ஆர்டர் செய்துள்ளார்.

பின்னர் அவர் ஆர்டர் செய்த அந்த சிக்கன் வந்ததும் அந்த பெண் அதை சாப்பிட்டப்போது திடீரென்று அவரின் பற்களில் ஏதோ ஒரு மர கட்டை போல் ஒரு பொருள் சிக்கியது.

என்னவென்று அவர் ஆராய்ந்த போது, அது இறந்து போன பெரிய சைஸ் சிலந்தி பூச்சி என்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அந்தப் பெண் மிகவும் வெறுப்படைந்து, பணத்தைத் திரும்ப பெறுவதற்காக மெக்டொனால்டு கடையைத் தொடர்புகொண்டு, இது பற்றி கேட்டார்.

உடனே அந்த நிறுவன அதிகாரிகள் வேறு மாற்று உணவு கொடுத்து அவரை சமாதானம் செய்து விட்டு, இந்த விஷயத்தை வெளியே சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆனால் அந்த பெண் இதை ஊடகத்திடம் கொண்டு சென்று தனக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென்று கூறியுள்ளார்.

இது பற்றி உணவுத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.