உயிரிழந்த 50 காவலர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிதி- முதல்வர் பழனிசாமி உத்தரவு

family people politician
By Jon Feb 09, 2021 12:19 PM GMT
Report

உடல்நலக்குறைவு மற்றும் விபத்தில் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். பொதுமுடக்கத்தில் எதிர்பாராத பல விபத்துகளும் உயிரிழப்புகளும் நடந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு உயிரிழப்பு ஏற்படும் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிசாமி நிவாரணம் அறிவித்து வருகிறார்.

அந்த வகையில்,கொரோனா காலக்கட்டத்தில் மக்களுக்கு பெரும் உதவியாக இருந்த முன்களப்பணியாளர்கள் இறந்தால் அவர்களது குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. அந்த வகையில், விபத்து மற்றும் உடல் நலக்குறைவால் உயிரிழந்த 50 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி வழங்குமாறு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழந்த காவலர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த முதல்வர், பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.