தாலி கட்டிய சில மணிநேரங்களில் மணமகள் மரணம்! குடும்பத்தினர் அதிர்ச்சி
ஒடிசாவில் திருமணம் முடிந்த தினத்தன்று மாலை மாப்பிள்ளை வீட்டாருக்கு செல்லும் முன் மணமகள் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. ஒடிசாவின் சோனேபூர் பகுதியில் Rosy Sahu என்ற பெண்ணுக்கும், Bisikesan என்ற இளைஞருக்கும் கடந்த வெள்ளியன்று திருமணம் நடந்தது. உறவினர்கள் சூழ திருமணம் நடந்து முடிந்து சடங்குகள் செய்யப்பட்டன, அன்று மாலை Sahu-யை அவளது மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.
தன்னுடைய குடும்பத்தை விட்டு பிரிந்து செல்கிறோம் என தொடர்ந்து அழுது கொண்டிருந்த Rosy Sahu, ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்தார். இதனால் பதறிப்போன உறவினர்கள், அவளது முகத்தில் தண்ணீரை தெளித்த எழுப்ப முயற்சித்தனர், ஆனாலும் தொடர்ந்து மயக்கத்திலேயே இருந்ததால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு Rosy Sahu-யை பரிசோதித்த மருத்துவர்கள் அவள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர், இதனால் ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உறைந்தது.
Rosy Sahu சில மாதங்களுக்கு முன்பே தந்தையை பறிகொடுத்ததால், மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.