பாலாற்றில் செத்து மிதக்கும் மீன்கள் - துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி
ஆம்பூர் அருகே பாலாற்றில் மீன்கள் செத்து மிதிப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரிய கோமேஸ்வரம் பகுதியில் பாலாற்றில் மீன்கள் செத்து மிதிப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.
அப்பகுதியில் பாலாற்றில் தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் தோல் கழிவு நீர் கலப்பதாக கூறப்படுகிறது.
இதனால் ஆற்று நீர் முழுவதும் நிறம் மாறி காணப்படுகிறது. மேலும் ஆற்று நீரில் வாழும் மீன்கள் கொத்து கொத்தாக செத்து மதிப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது.
சம்பவம் தொடர்பாக மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.