ஒரே நாளில் கொரோனாவால் 312 பேர் பலி

covid people world dead
By Jon Mar 30, 2021 03:08 AM GMT
Report

கொரோனாவால் இதுவரை இந்தாண்டில் 312 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. உலகம் முழுவதும் தற்போது கொரோனா நோயின் இரண்டாவது அலையின் வேகம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டில் முதன்முறையாக நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 312 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

கடந்த டிசம்பர் 24 க்குப் பிறகு இதுவே அதிகபட்ச இறப்பு எண்ணிக்கையாகும். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதித்தவர் எண்ணிக்கையும் 62,500 ஐ தாண்டியுள்ளது. கடந்த 163 நாட்களில் இதுவே அதிகபட்ச தொற்று எண்ணிக்கை.

தற்போது கொரோனா பாதித்து சுமார் 4 லட்சத்து 85 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை இன்று 5 லட்சமாக உயரும் என கூறப்படுகிறது.