நள்ளிரவில் பிறந்தநாள் கொண்டாட்டம்: துடிதுடிக்க கொல்லப்பட்ட இளைஞர்
வேலூரில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. வேலூர் மாவட்டத்தின் குடியாத்தம் அருகே சாமரிஷிகுப்பம் பகுதியை சேர்ந்த ஹேமாத் குமார், இவரது பிறந்தநாளை நண்பர்களான அஜித், திலீப் ஆகியோர் சேர்ந்து நள்ளிரவில் சாலையில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அதே பகுதியை சேர்ந்த ராபின் (28), ரீகன்ராஜா (38) மற்றும் சின்னா (25) ஆகியோர் சாலையின் நடுவே வைத்து கேக் வெட்டி கொண்டாட்டம் செய்தது குறித்து கேட்டுள்ளனர்.
இதில் இரு கோஷ்டிக்கும் வாக்குவாதம் ஏற்பட, ஒருகட்டத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது, இந்நிலையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களை எதிர்தரப்பினர் கத்தி, பிளேடால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அஜித், மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீசார் இக்கொலை தொடர்பாக ராபின், ரீகன், சின்னா ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஏற்கனவே முன்விரோதம் இருந்தது தெரியவந்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் கோவில் விவகாரத்தில் உயிரிழந்த அஜித்துக்கும், ராபின், ரீகன் இருவருக்கும் முன்விரோதம் இருந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.