என்னது தவளையா யாரு பாத்த வேலை இது ? - மதுபாட்டிலில் இறந்துகிடந்த தவளை கடுப்பான மதுப்பிரியர்கள்

By Irumporai May 27, 2022 11:02 AM GMT
Report

திண்டுக்கல் மாவட்டம் பட்டி வீரன்பட்டி பகுதியில் அரசு மதுபான கடையில் விற்கப்பட்ட மது பாட்டிலில் தவளை இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழில் செய்து வருபவர் பாண்டி. இவர் நேற்று மதியம் சித்தரேவு அரசு டாஸ்மாக் கடைக்கு சென்று, மதுபானம் வாங்கியுள்ளார். பின்னர், அதனை திறந்து குடிப்பதற்காக மதுபாட்டிலை குலுக்கிபோது, பாட்டிலுக்குள் ஏதோ ஒன்று மிதப்பது போன்று தெரிந்துள்ளது.

பின்னர் சற்று உற்று கவனித்து பார்த்தபோது மதுவில், சிறிய தவளை ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது. பின்னர் இதுகுறித்து சித்தரேவு டாஸ்மாக் கடை விற்பனையாளாரிடம் பாண்டி முறையிட்டுள்ளார்.

அப்போது வாங்கிய மது பாட்டிலுக்கு பதிலாக வேறு மதுபாட்டில் தருவதாக கூறி சமாதானம் செய்ய முயன்றுள்ளார். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத பாண்டி மதுபாட்டிலை திருப்பிக் கொடுக்காமல் தனது வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார்.

என்னது தவளையா யாரு பாத்த வேலை இது ? - மதுபாட்டிலில் இறந்துகிடந்த தவளை கடுப்பான மதுப்பிரியர்கள் | Dead Baby Frog Found In Tasmac Liquor Bottle

இதனிடையே மதுபாட்டிலில் இறந்த நிலையில் தவளை கிடந்த செய்தி, அப்பகுதி முழுவதும் வேகமாக பரவியிருக்கிறது. பின்னர் நெல்லூர் கிராமத்தினர் ஏராளமானோர் மதுபாட்டிலில் கிடந்த தவளையை பார்த்துச் சென்றுள்ளனர்.

மேலும் மது பாட்டிலில் தவளை இருந்த புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவியது , இந்த சம்பவம் மதுப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.