மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்த குயிண்டன் டி காக் - குவியும் பாராட்டு

quintondekock venkateshiyer
By Petchi Avudaiappan Jan 21, 2022 09:49 PM GMT
Report

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வீரர்  குயிண்டன் டி காக் ஸ்டம்பிங் செய்த சம்பவம் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. 

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. பார்ல் நகரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனிடையே  இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது ஒரு நாள் போட்டி அதே பார்ல் நகரில் நேற்று நடைபெற்றது. 

இப்போட்டியிலும் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி அசத்தியது. இப்போட்டியில் இந்திய அணி வீரர் வெங்கடேஷ் ஐயர் 22 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தார். 

அப்போது தென்னாப்பிரிக்க அணி வீரர் ஆண்டிலா வீசிய பந்தை அவர் இறங்கி அடிக்க முற்பட்டார். ஆனால் பந்து நழுவி விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக்கிடம் செல்ல அவர் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து வெங்கடேஷ் ஐயர் விக்கெட்டை கைப்பற்றினார். இதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.