நம்ம DDக்கு வளைகாப்பு? - தீயாய் பரவும் புகைப்படம்

DD Dhivyadharshini Baby shower டிடி புகைப்படம் வைரல் photo-viral திவ்யதர்ஷினி வளைகாப்பு
By Nandhini Mar 21, 2022 10:41 AM GMT
Report

விஜய் டி.வி.யில் பிரபல தொகுப்பாளியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. இவரது ரசிகர்கள் இவரை டிடி என்று அன்போடு அழைத்து வருகிறார்கள்.

இவர் தொகுத்து வழங்கிய ‘ஜோடி நம்பர் 1’, ‘காபி வித் டிடி’, ‘ஹோம் ஸ்வீட் ஹோம்’ போன்ற நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமடைந்தது.

கடந்த 2014ம் ஆண்டு தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்த டிடி, கணவனை விவாகரத்து செய்துவிட்டார். 

தொகுப்பாளினியாக இருந்து வந்த டிடி, ‘பா.பாண்டி’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

தற்போது, கௌதம் மேனன் இயக்கத்தில் ஜோஷ்வா இமை போல் காக்க படத்தில் டிடி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். சுந்தர் சி திரைப்படத்தை குஷ்பூவின் Avni Cinemax தயாரிக்கும் படத்திலும் டிடி நடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது டிடியின் புதிய புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் டிடி கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு வளைகாப்பு செய்தது போல் உள்ளது.

படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட இந்த BTS புகைப்படத்தை தற்போது நடிகர் விச்சு மூலம் வெளியாகி சமூகவலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.   

நம்ம DDக்கு வளைகாப்பு? - தீயாய் பரவும் புகைப்படம் | Dd Dhivyadharshini Baby Shower Photo Viral