ஹைதராபாத்தை பழிவாங்க வார்னரை களமிறக்கிய டெல்லி அணி - என்ன நடந்தது?
ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி 21 ரன்கள் அபார வெற்றி பெற்றது.
மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்கவீரரான டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடி 92 ரன்கள் குவித்தார். அவரைத் தொடந்து களம் கண்ட பவல் 67 ரன்கள் எடுக்க அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது.

இதனைத் தொடர்ந்து 208 ரன்கள் என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி விளையாடியது. அந்த அணியில் நிக்கோலஸ் பூரன் 62, மார்க்ரம் 42 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் ரன் குவிக்க தவறினர். இதனால் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிறகு 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் டெல்லி அணி 21 ரன்கள் அபார வெற்றி பெற்றது.
மேலும் டெல்லி அணி 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 5 வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
ஈரானுக்குள்ளே மொசாட்டின் இரகசிய தளங்கள் : அரபு நாடுகளின் மீதான தாக்குதலின் பின்னணியில் யார்..! IBC Tamil
தாக்குதலில் ஒரு கால் இழப்பு : சிகிச்சைக்காக இரகசியமாக ரஷ்யா அழைத்துச் செல்லப்பட்ட மொஜ்தபா கமேனி...! IBC Tamil