8 வீரர்கள் பவுலிங் போட்டும் டெல்லியிடம் தோற்ற கொல்கத்தா அணி ... கடுப்பான ரசிகர்கள்
கொல்கத்தா அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற 41வது லீக் ஆட்டத்தில் டெல்லி - கொல்கத்தா அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணியில் ஆரோன் பின்ச் 3, வெங்கடேஷ் ஐயர் 6, தமிழக வீரர் பாபா இந்திரஜித் 6, சுனில் நரைன் மற்றும் ஆண்ட்ரூ ரஸல் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டாக, மறுபுறம் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் மட்டும் நிதானமாக ஆடி 42 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய நிதிஷ் ராணா 57 ரன்கள் விளாசினார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களும் , ரகுமான் 3 விக்கெட்களும் கைப்பற்றி அசத்தினர்.
இதனையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. அந்த அணியில் டேவிட் வார்னர் 42, பவெல் 33, அக்ஸர் படேல் 23 ரன்கள் எடுக்க 19 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கொல்கத்தா அணி தரப்பில் ஆரோன் பின்ச், பாபா இந்திரஜித், ரிங்கு சிங் தவிர 8 பவுலர்களை பயன்படுத்தியும் டெல்லியின் வெற்றியை தடுத்து நிறுத்த முடியவில்லை.