தடுமாறிய ஹைதராபாத் அணி - அசால்ட்டாக வெற்றி பெற்ற டெல்லி அணி

IPL2021 SRHvDC
By Petchi Avudaiappan Sep 22, 2021 05:59 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

ஐபிஎல் தொடரில் ஹைதரபாத் அணிக்கெதிரான ஆட்டத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2021 தொடரின் 33வது போட்டியில் ஹைதராபாத் - டெல்லி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதல் பேட் செய்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரரான வார்னர் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.

அதிகப்பட்சமாக அப்துல் சமது 28 ரன்களும், ரஷீத் கான் 22 ரன்களும் எடுக்க 20 ஓவர்களில் ஹைதரபாத் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணி தரப்பில் அதிகப்பட்சமாக ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் பிரித்வி ஷா 11 ரன்களில் வெளியேற, தவான் - ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை விளாசி தள்ளினர்.

தவான் 42 ரன்களில் அவுட்டாக , சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் 47 ரன்களும், ரிஷப் பண்ட் 35 ரன்களும் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். 17.5 ஓவர்களில் டெல்லி அணி 2 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.