விக்கெட்டுகளை இழந்து திணரும் ராஜஸ்தான் : பவுலிங்கில் பட்டைய கிளப்பும் டெல்லி கேபிடள்ஸ்!

DCvRR RRvsDC DCvsRipl2021
By Irumporai Sep 25, 2021 12:59 PM GMT
Report

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இன்று அபுதாபியில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில், ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

கார்த்திக் தியாகி வீசிய முதல் பந்திலேயே ஷிகர்தவான் ஸ்டம்புகளை பறிகொடுத்தார். இதனால், டெல்லி அணி 18 ரன்களிலே தனது முதல் விக்கெட்டை இழந்தது. ஷிகர் தவான் 8 ரன்களை எடுத்த நிலையில் வெளியேறினார், அவர் வெளியேறிய அடுத்த ஓவரிலே மற்றொரு இளம் வேகப்பந்து வீச்சு புயல் சேத்தன் சக்காரியா பந்துவீச்சில் பிரித்வி ஷாவும் 10 ரன்களை எடுத்த நிலையில் லிவிங்ஸ்டனிடம் கேட்ச் கொடுத்த ஆட்டமிழந்தார்.

21 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை டெல்லி இழந்ததால் அந்த அணியை கேப்டன் ரிஷப் பண்டும், முன்னாள் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரும் இணைந்து மீட்டனர். அப்போது, ரிஷப் பண்ட் 24 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 24 ரன்களை எடுத்திருந்த நிலையில் முஸ்தபிஷீர் பந்துவீச்சில் போல்டாகினார். இதையடுத்து, மறுமுனையில் ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக ஆடத் தொடங்கினார். ஹெட்மியர் வந்த வேகத்தில் 4 பவுண்டரி விளாசி 28 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

அடுத்தடுத்து இறங்கிய வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் 154 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் அணியில் சேத்தன் சகரியா, முஸ்தபிசுர் ரஹ்மான் தலா 2 விக்கெட்டும், ராகுல் திவாட்டியா, கார்த்திக் தியாகி தலா 1 விக்கெட்டும் பறித்தனர். 155 ரன்கள் இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கவுள்ளது. தற்போது ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

சீனியர் வீரர் டேவிட் மில்லரும் அஷ்வினின் பந்தில் அவசரப்பட்டு இறங்கிவந்து ஆட முயன்று 7 ரன்னில் ஸ்டம்பிங் ஆகி வெளியேற, பவர்ப்ளேயில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு வெறும் 21 ரன்கள் மட்டுமே அடித்தது. இந்த போட்டியில் வெற்றி பெற பொறுப்புடன் ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் கேப்டன் சஞ்சு சாம்சன் நிதானமாக ஆடிவருகிறார். சாம்சனுடன் லோம்ரார் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.