தடுமாறிய டெல்லி - மிரட்டி ப்ளே ஆஃப்க்குள் நுழைந்த சென்னை சூப்பர் கிங்ஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்று ப்ளே ஆஃப்க்குள் நுழைந்தது.
DC vs CSK
டெல்லியில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இதில், இன்னிங்ஸை இளம் இந்திய வீரரான ருத்ராஜ் மற்றும் கான்வே ஆடினர். ஐபிஎல் தொடரில் ருத்ராஜ் கெய்க்வாட்டிற்கு இது 50வது போட்டி. டெல்லி அணியின் பந்து வீச்சை இருவரும் அடித்து நொறுக்கினர்.
அதன் பின்னர் கான்வேவுடன் கைகோர்த்த டூபே சென்னை அணியின் ரன்ரேட்டை மேலும் உயர்த்த ருத்ரதாண்டவ ஆட்டத்துக்கு அடி போட்டார். துபேவும் தனக்கு கிடைத்த பந்துகளை சிக்ஸருக்கு விளாச சென்னை அணி 18வது ஓவரிலேயே 190 ரன்களைக் கடந்தது.
மிரட்டிய சிஎஸ்கே
தொடர்ந்து, சென்னை ரசிகர்களின் ஆரவத்துடன் தோனி களமிறங்கினார். ஆனால் அவரால் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை. 19வது ஓவரின் தொடக்கத்தில் கான்வே தனது விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் சேர்த்தது. அதனையடுத்து, டெல்லி அணிக்காக போராடிய கேப்டன் வார்னர் 86 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
18 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து வெளியேறியது. இதனால் சிஎஸ்கே அபார வெற்றி பெற்று ப்ளே ஆஃப்க்கு முன்னேறியுள்ளது.