பெங்களூருக்கு 165 ரன்களை இலக்காக நிர்ணயித்த டெல்லி - கடைசி போட்டியில் வெற்றி யாருக்கு?
ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் டெல்லி அணி 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
துபாயில் நடைபெறும் 56வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்க வீரர்களான தவான் 43 ரன்களும், பிரித்வி ஷா 48 ரன்களும், ஹெட்மேயர் 29 ரன்களும் விளாச நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணி தரப்பில் அதிகப்பட்சமாக முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியுள்ளது.