பஞ்சாப் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது டெல்லி கேபிட்டல்ஸ்..!

Delhi Capitals Punjab Kings IPL 2022
By Thahir May 16, 2022 06:46 PM GMT
Report

நடப்பு ஆண்டின் 15-வது ஐபிஎல் தொடர் பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று 64-வது லீக் போட்டி மும்பையில் உள்ள டி.ஒய் பட்டீல் மைதானத்தில நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து டெல்லி அணி பேட்டிங் செய்தது.தொடக்க வீரர் வார்னர்,லிவிங்ஸ்டன் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் ராகுல் சாஹாவிடம் கேட்ச் ஆட்டமிழந்தார்.

இதன் பின் ஜோடி சேர்ந்த சர்பிரஸ் கான்,மிட்சேல் மார்ஷ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சர்பிரஸ் 32 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். இதன் பின் வந்த வீரர்கள் ஆட்டமிழந்தனர் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவிந்தது.

இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக பேர்ஸ்டோவ் - தவான் களமிறங்கினர்.

15 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில் அண்ரிச் நார்ட்ஜெ பந்துவீச்சில் அக்சர் பட்டேல் இடம் கேட்ச் கொடுத்து பேர்ஸ்டோவ் வெளியேறினார்.

அவரை தொடர்ந்து களமிறங்கிய பனுகா ராஜபக்சா 4 ரன்களில் நடையை கட்டினார். அவரை அவுட்டாகிய கையோடு தொடக்க வீரர் தவான்-யும் 19 ரன்களில் ஷர்துல் தாகூர் வெளியேற்றினார்.

அதை தொடர்ந்து பஞ்சாப் அணி சரிவை நோக்கி சென்றது. அக்சர் பந்துவீச்சில் கேப்டன் மயங்க் அகர்வால் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

அதிரடி வீரர் லிவிங்ஸ்டன் 3 ரன்களிலும் , ஹார்ப்ரீத் பிரார் 1 ரன்னிலும் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் வெளியேறினர்.

டெல்லி அணி ஒரு கட்டத்தில் 68 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஒருமுனையில் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் ஜிதேஷ் சர்மா அதிரடியாக விளையாடி வந்தார்.

அவருடன் இணைந்து இறுதி நேரத்தில் ராகுல் சாஹர் சிறிது அதிரடி காட்ட போட்டியில் பரபரப்பு தொற்றி கொண்டது.

இதன் பின் ஜிதேஷ் சர்மா 44 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

இதையடுத்து டெல்லி அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.அதிகபட்சமாக டெல்லி அணி பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.