ஹைதராபாத்தில் துணிகரம்: ஏ.டி.எம்மில் பணம் நிரப்பியபோது துப்பாக்கிச் சூடு நடத்தி கொள்ளை
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பிக் கொண்டிருந்த பாதுகாவலர் மற்றும் வங்கி ஊழியர் மீது துப்பாக்கி சூடு நடத்தி பணம் கொள்ளை.
தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள குகட்பல்லியில் உள்ள எச்.டி.எப்.சி. வங்கி ஏடிஎம் மையத்தில் வழக்கம்போல் பாதுகாவலருடன் இணைந்து வங்கி ஊழியர் பணம் நிரப்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது மர்ம நபர்கள் சிலர் வங்கி ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பாதுகாவலர் மற்றும் வங்கி ஊழியர் படுகாயம் அடைந்தனர்.
ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர். காயமடைந்தவர்களை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த துணிகர சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.