சர்ச்சை பேச்சு - ஆ.ராசாவை தொடர்ந்து தயாநிதிமாறனுக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில், முதல்வர் பற்றிய ஆ.ராசாவின் பேச்சு கடும் சர்ச்சைக்குள்ளானது. அதனைத் தயாநிதிமாறன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் பிரதமர் மோடி குறித்து பேசியதும் சர்ச்சைக்குள்ளானது. ஆ.ராசா விவகாரத்தில் விளக்கம் கேட்டிருந்த தேர்தல் ஆணையம் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய ராசாவுக்கு தடை விதித்துள்ளது.
தற்போது தயாநிதி மாறனிடமும் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆ.ராசாவின் கருத்துக்கு கண்ணீர் விடவே, ஆ.ராசா மன்னிப்பு தெரிவித்தார். இருந்தாலும் அதிமுகவினர் தேர்தல் ஆணையம் வரை சென்றனர். தற்போது தேர்தல் ஆணையம், ஆ.ராசா பிரச்சாரம் செய்வதற்கு 48 மணி நேரம் தடை விதித்தள்ளது.
இதனையடுத்து, தற்போது முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்பியுமான தயாநிதி மாறன், கடந்த 28ம் தேதி கிணத்துக்கடவு தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியதை மேற்கொள் காட்டி, ஜெயலலிதாவையும், மோடியையும் சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சனம் செய்தார்.

இதனையடுத்து, தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேசிய, தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தயாநிதி மாறன் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என அதிமுக செய்தி தொடர்பாளர் பாபுமுருகவேல் நேற்று தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் புகார் மனு அளித்தார்.
அதன் அடிப்படையில், தயாநிதி மாறன் பேச்சு குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோவை மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.