தயாநிதி மாறனுக்கு ஹாப்பி நியூஸ்..மீண்டும் கிடைத்த பணம்!!
வங்கி கணக்கில் இருந்து மாயமான நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனின் பணம் திரும்ப கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயாநிதி மாறன்
கடந்த 2009 முதல் 2014-ஆம் ஆண்டு வரை மத்தியில் அமைச்சராக பணியாற்றிய தயாநிதி மாறன், தற்போதும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். திமுக முன்னணி மூத்த கட்சி உறுப்பினராக தற்போதும் திகழ்ந்து வரும் தயாநிதி மாறன், மக்களவையில் தொடர்ந்து பாஜக குறித்து பல கேள்விகளையும் எழுப்பி வருகின்றார்.
இவர் தற்போது தனது வங்கிக் கணக்கில் இருந்து 99 ஆயிரத்தி 999 ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த தகவல் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாயமான பணம்
நாடாளுமன்ற உறுப்பினருகே இந்த நிலைமையா? என பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி இணைந்து இணைப்பு வங்கி கணக்கு வைத்துள்ள நிலையில், கடந்த சில தினங்களாக மலேசியாவில் இருக்கும் தயாநிதி மாறனின் மனைவியின் மொபைல் போனில் தொடர்பு கொண்ட சில மர்ம நபர் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, அக்கவுண்ட்டை அப்பேட் செய்ய வேண்டி என கூறி OTP நம்பர் கேட்டுள்ளார்.
ஆனால் தயாநிதி மாறனின் மனைவி OTP நம்பரை கூறவில்லை. இருப்பினும், அடுத்தடுத்து 3 முறை தயாநிதி மாறனின் மனைவிக்கு தொடர்பு கொண்டநிலையில், சில நிமிடங்களில் வங்கி கணக்கில் இருந்து 99 ஆயிரம் 999 ரூபாய் மாயமானதாக கூறப்படுகிறது.
இந்த செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது தயாநிதி மாறன் வங்கி கணக்கில் இருந்து திருடுபோன பணம், திரும்ப கிடைத்துள்ளதக சம்மந்தப்பட்ட பேங்க்கான ஆக்சிஸ் பேங்க் விளக்கமளித்துள்ளது.