அந்த தருணம் என் வாழ்க்கையில ரொம்ப மோசமானதாக இருந்தது : டேவிட் மலான்
2018 தொடரில் விராட் கோலியின் கேட்சுகளை இருமுறை நழுவவிட்டதை மறக்க முடியாது என்று இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் கூறியுள்ளார். சிறந்த டி20 வீரரான டேவிட் மலான், இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். 33 வயது மலான்,
இங்கிலாந்து அணிக்காக 15 டெஸ்டுகள், 6 ஒருநாள், 30 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். டெஸ்டில் கடைசியாக இந்தியாவுக்கு எதிராக 2018 தொடரில் தனது முதல் இன்னிங்ஸில் 149 ரன்கள் எடுத்ததோடு, டெஸ்ட் தொடரில் 593 ரன்கள் எடுத்து அசத்தினார் .
Last Time Dawid Malan Played for England, He Dropped Virat Kohli-'Not the Best Memory'#ENGvINDhttps://t.co/5wZjVO9jvC
— CricketNext (@cricketnext) August 25, 2021
குறிப்பாக விராட் கோலி. அவர் அளித்த இரு கேட்சுகளை ஸ்லிப் பகுதியில் நழுவவிட்டார் டேவிட் மலான். இதுபற்றி டேவிட் மலான் கூறியதாவது: கோலியின் இரு கேட்சுகளை நழுவவிட்டதை என்னால் மறக்க முடியாது. அதனால் அவர் 150 ரன்கள் வரை எடுத்துவிட்டார். நல்ல நினைவாக அது அமையவில்லை. அதன்பிறகு ஸ்லிப் பகுதியில் அவ்வளவாக நான் நிற்பதில்லை. அதன் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் திடீரென்று ஸ்லிப் பகுதியில் நிற்பது கடினமாக இருந்தது. எனினும் இங்கிலாந்துக்காக விளையாடும்போது எல்லாவிதமான வாய்ப்புகளையும் நிறைவேற்ற வேண்டும். அடுத்த வாய்ப்பு வரும் போது சில கேட்சுகளைப் பிடிப்பதில் ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார்.

பார்த்தவுடன் வாயை பிளக்க வைத்த நடிகை மதுபாலாவின் மகள்கள்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? Manithan
