இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியில் இருந்து டேவிட் வார்னர் விலகல்..!
David Warner
Indian Cricket Team
Australia Cricket Team
By Thahir
ஆஸ்திரேலிய அணியிலிருந்து டேவிட் வார்னர், காயம் காரணமாக இரண்டாவது போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
டேவிட் வார்னர் விலகல்
இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் நேற்று டெல்லியில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா அணி முதலில் பேட் செய்தது.
இதில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய போது, வார்னருக்கு பந்து ஹெல்மெட்டில் பட்டு காயமடைந்துள்ளார்.
இதனால் அவர் இரண்டாவது இன்னிங்சில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மேட்ரென்ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.