இந்திய அணியில் ஜடேஜா நிச்சயம் விளையாட வேண்டும் - டேவிர் வார்னர் அட்வைஸ்

By mohanelango Jun 14, 2021 01:53 PM GMT
Report

இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வருகிற 18-ம் தேதி விளையாட இருக்கிறது.

இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்டன் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டிக்கு பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. 

இந்த நிலையில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இந்தியா இந்தப் போட்டியில் ரவிந்திர ஜடேஜாவை கட்டாயம் விளையாட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் ஜடேஜா நிச்சயம் விளையாட வேண்டும் - டேவிர் வார்னர் அட்வைஸ் | David Warner Wants Jadeja In Indian Test Team

மேலும், “இங்கிலாந்து மைதானங்களில் ரவீந்திர ஜடேஜா மிக சிறப்பாக செயல்படும் ஒரு வீரர். இதற்கு முன் அங்கு விளையாடி அனைத்து போட்டிகளிலும் மிக சிறப்பாக விளையாடி இருக்கிறார்.

எனவே அவரை இறுதிப்போட்டியில் விளையாட வைப்பதன் மூலம் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டும் பலப்படும். அதே சமயத்தில் அவர் ஒரு மிகச்சிறந்த ஃபீல்டர் என்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே நிச்சயமாக அவர் இறுதிப் போட்டியில் விளையாடினார் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.