மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா '' - வார்னரை கலாய்த்த விராட் கோலி, வைரலாகும் வீடியோ

viratkohli pushpa davidwarner
By Irumporai Dec 12, 2021 06:40 AM GMT
Report

 வார்னர் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார். பிரிஸ்பேனில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் வார்னர் 94 ரன்கள் விளாசினார். ஆனால் வார்னர் ஃபில்டிங் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கவில்லை.

இதற்கு வார்னருக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது இந்த நிலையில், வார்னர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அல்லு அர்ஜூனா நடித்துள்ள புஷ்பா படத்தின் பாடலில், இவரது முகத்தை மாற்றி அதனை வெளியிட்டார். அதில் யாராவது இந்த நடிகரை டேக் செய்து காட்டுங்கள் என்று குறிப்பிட்டார். வார்னேவில் இந்த வீடியோ வைரலானது. 

தற்போது வார்னரின் இந்த வீடியோவிற்கு கிண்டல் செய்துள்ள விராட்கோலி :

மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா

நீங்க நல்ல தானே இருக்கீங்க என்று கிண்டல் செய்வது போல் கேட்டார். இதற்கு வார்னர், விளையாடும் போது சின்ன காயம் தான் ஏற்பட்டது. ஆனால் மண்டையில் எனக்கு காயம் ஏற்பட்டதா இல்லையா என்று தெரியவில்லை என்று விளையாட்டாக கூறினார். விராட் கோலி, வார்னரின் இந்த கிண்டலும் தற்போது வைரலாகி வருகிறது.