அவனுங்க பேசுறதெல்லாம் காதிலேயே வாங்க கூடாது - டேவிட் வார்னர்

David Warner T20 World cup
By Thahir Oct 30, 2021 10:51 AM GMT
Report

இலங்கைக்கு எதிரான போட்டியில் பிளேயர் ஆப் தி மேட்ச் பெற்ற பெற்ற டேவிட் வார்னர் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் பொழுது தனது கம்பேக் குறித்து பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்ட டேவிட் வார்னர் 2021ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படாததன் காரணமாக அவருடைய கேப்டன் பதவியை பறித்து கேன் வில்லியம்சனிடம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒப்படைத்தது.

அப்படி இருந்தும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2021 ஐபிஎல் தொடரில் மிக மோசமாக விளையாடி பிளே ஆப் சுற்றுக்கு கூடதகுதி பெறாமல் முதல் ஆளாக வெளியேறியது.

மேலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது, டேவிட் வார்னரை பாதியிலேயே அணியிலிருந்து நீக்கியது இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

இருந்தபோதும் உலக கோப்பை தொடரில் டேவிட் வார்னர் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தான் யார் என்பதை புரிய வைப்பார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில்,

டேவிட் வார்னர் உலக கோப்பை தொடரின் பயிற்சி போட்டியிலும் மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டியிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை.

இதன் காரணமாக டேவிட் வார்னர் கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் ரசிகர்களிடத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தார்,

இதனையடுத்து இலங்கைக்கு எதிரான போட்டியில் மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்த டேவிட் வார்னர் 65 ரன்கள் அடித்து அந்த போட்டியின் பிளேயர் ஆப் தி மேட்ச் பட்டத்தை பெற்றார்.

இவருடைய ஆட்டம் தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்தது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

இன்னிலையில் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் பொழுது டேவிட் வார்னர் தனது கம்பேக் குறித்து பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர், இந்திய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவி அஸ்வின் பந்தை எதிர்கொண்டு அவுடான பொழுது அனைவரும் என்னை விமர்சித்தார்கள் ஏன் தேவை இல்லாத ஷாட்களை டேவிட் வார்னர் அடிக்க முயற்சிக்கிறார் என்று என்னை திட்டினார்கள், ஆனால் அந்தப் பந்தை அடிப்பது அவ்வளவு எளிதான ஒன்றுதான்,அது லோ ரிஸ்க் ஷாட் என்று கூட சொல்லலாம்.

நான் கண்மூடித்தனமாக எந்த ஒரு சாட்டையும் அடிப்பதில்லை பில்டர்கள் எங்கே உள்ளார்கள், யார் பந்து வீசுகிறார் அவர் எப்படி பந்து வீசுவார் என்பதை நன்கு உணர்ந்து தான் விளையாடுகிறேன், இலங்கைக்கு எதிரான போட்டியிலும் அதே ஷாட்களை தான் அடித்தேன் என்றும் டேவிட் வார்னர் அதில் பேசியுள்ளார்.

மேலும் விமர்சனங்கள் குறித்து பேசிய டேவிட் வார்னர், நான் என்னை விமர்சிக்கிறார்கள் அவர்களை பழி வாங்கும் எண்ணத்தோடு ஒரு பொழுதும் விளையாடவில்லை,

விளையாட்டைப் பொறுத்த வரை இப்படி நிகழ்வது சாதாரண ஒரு விஷயம்தான், எப்படி சிறப்பாக செயல்பட்டு மேலே உயர்கிரோமோ அதே போன்று கீழே விழுவது சகஜம்தான், நாம் செய்ய வேண்டியது எல்லாம் தன்னம்பிக்கையோடும் முகத்தில் சிரிப்போடும் அதை எதிர்கொள்வது மட்டும் தான் என்றும் டேவிட் வார்னர் அதில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.