விநோதமான பந்திலும் சிக்ஸர் விளாசிய வார்னர் - வைரலாகும் வீடியோ
பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் விநோதமாக சிக்ஸர் விளாசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், பாகிஸ்தான் அணியும் நேற்று மோதின. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரிஸ்வான் 67 ரன்களும், ஃப்கர் ஜமான் 55 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் 49, மேத்யூ வேட் 41, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 40 ரன்கள் விளாச 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
YOUTUBE THUMBNAIL MATERIAL.
— Johnny#Aus??? (@JohnnySar77) November 11, 2021
?.#DavidWarner pic.twitter.com/dVC0jPcBNs
இந்த ஆட்டத்தில் டேவிட் வார்னர் ஹபீஸ் வீசிய பந்தில் வித்தியாசமான சிக்ஸர் ஒன்றை அடித்தார். அதாவது அந்த பந்து இரண்டு முறை தரையில் பட்டு வந்தது. இது டெட் பால் பா என்று ரசிகர்கள் கவனித்துக்கொண்டிருக்க வார்னர் இறங்கி வந்து டீப் மிட் விக்கெட் திசையில் பிரம்மாண்ட சிக்ஸர் பறக்கவிட்டார்.வார்னர் விளையாட்டுக்கு இந்த பந்தை அடித்திருக்கிறார் என ரசிகர்கள் நினைக்க அம்பயர் சிக்ஸ் என்றார்.
கிரிக்கெட் விதிகளின் படி அது நோ-பால். கள நடுவரும் ஹபீஸ் வீசிய பந்தை நோபால் என்று அறிவித்தார். வார்னர் அந்தப் பந்தை சரியாக பயன்படுத்தி சிக்ஸ்ர் அடித்ததால் ஆஸ்திரேலியா அணிக்கு அது போனஸாக அமைந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.