என்னை ஏன் நீக்கினாங்கன்னு தெரியலை - குமுறும் டேவிட் வார்னர்

David Warner IPL 2021 SRH
By Thahir Oct 13, 2021 10:53 AM GMT
Report

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து என்னை நீக்கியது ஏன் என்பது பற்றி விளக்கம் அளிக்கவில்லை என டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தார் ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர். 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர் வார்னர்.

என்னை ஏன் நீக்கினாங்கன்னு தெரியலை - குமுறும் டேவிட் வார்னர் | David Warner Ipl 2021 Srh

இந்த சீசனில் அவர் சிறப்பாக செயல்படாததால் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதில் நியூசிலாந்தை சேர்ந்த கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இருந்தாலும் அந்த அணி லீக் சுற்றோடு வெளியேறிவிட்டது.

இந்த தொடரில் டேவிட் வார்னர் , கடைசி சில ஆட்டங்களில் உட்கார வைக்கப்பட்டார். இந்நிலையில், கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது ஏன் என்பது பற்றி தனக்கு விளக்கம் அளிக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது: ஐதராபாத் எனக்கு 2 வது சொந்த ஊர் போன்றது. சன் ரைசர்ஸ் அணிக்காக மீண்டும் விளையாட ஆர்வமாக இருக்கிறேன்.

ஆனால், சர் ரைசர்ஸ் நிர்வாகம் என்ன முடிவெடுக்கும் என்பதை பொறுத்தே அது தெரியவரும். ஏலத்தை எதிர்பாக்கிறேன். கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது ஏன் என்று கேட்கிறார்கள்.

இதற்கு எப்படி பதில் சொல்வது என்று தெரியவில்லை. என்னை ஏன் நீக்கினார்கள் என்று விளக்கம் அளிக்கவில்லை. இது எனக்கு ஏமாற்றமாக இருந்தது.

இந்த தொடரில் சென்னையில் நடந்த 4 போட்டிகள் மோசமாக அமைந்து விட்டது. அதை ஜீரணிப்பது கடினம். மற்றொரு ஏலம் வர இருக்கிறது. சன் ரைசர்ஸ் அணியில் தொடர வேண்டும் என்பதைத் தவிர வேறு எதையும் நான் விரும்பவில்லை. ஆனால், அந்த முடிவு உரிமையாளர்களிடம் இருக்கிறது.