“அவர மாதிரி ஏன் உங்களால அடிக்க முடியல டேடி” - டேவிட் வார்னரை கேள்வி கேட்கும் மகள்கள்

Swetha Subash
in கிரிக்கெட்Report this article
நடப்பாண்டுக்கான ஐபிஎல் 15-வது சீசன் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் அணி நிர்ணயித்த 116 ரன்கள் இலக்கை, 30 பந்துகளில் 60 ரன்கள் குவித்து எடுத்து முடித்தார் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை சேர்ந்த டேவிட் வார்னர்.
இந்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றிருந்தாலும், இடதுகை ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் சதம் அடித்திருந்தார். இதனை குறிப்பிட்டு டேவிட் வார்னரின் மகள்கள் உங்களால் ஏன் சதம் அடிக்க முடியவில்லை என அவரை கேட்பதாக கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், “ஜோஸ் பட்லர் போல ஏன் மைதானத்தை விட்டு வெளியே உங்களால் சதம் முடியவில்லை என்று என் மகள்கள் என்னை கேட்கிறார்கள்.
ஆனால் 60 ரன்கள் மட்டும் போதுமானது என்பது அவர்களுக்கு தெரியவில்லை. இருந்தாலும் உலகெங்கிலும் உள்ள என் குழந்தைகள் போன்ற சிறியவர்களும் இந்த விளையாட்டை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருப்பது மிக மகிழ்ச்சி அளிக்கிறது” என டேவிட் வார்னர் தெரிவித்திருக்கிறார்.