கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் புஷ்பா பட பாடலுக்கு மைதானத்தில் நடனமாடும் டேவிட் வார்னர் - வீடியோ வைரல்
புஷ்பா திரைப்படத்தின் ஸ்ரீவள்ளி பாடலின் நடன அசைவுகளை மைதானத்தில் டெல்லி வீரர் டேவிட் வார்னர் ஆடி காண்பிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைராகி வருகிறது.
ஐபிஎல் போட்டியின் 19-வது லீக் ஆட்டத்தில் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ரிஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் கடந்த ஞாயிறு அன்று மோதின.
மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்நிலையில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.
20 ஓவர்களில் டெல்லி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்தது. இதையடுத்து 216 ரன்கள் என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களம் இறங்கி விளையாடியது.
மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொல்கத்தா அணி 19.4 ஓவர் முடிவில் 171 ரன்களுக்கு ஆட்டமிழக்கவே 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் பீல்டிங் செய்தபோது, புஷ்பா திரைப்படத்தின் ஸ்ரீவள்ளி பாடலுக்கு மைதானத்தில் வார்னர் ஸ்டெப் போட்டு அசத்தியுள்ளார்.
David Warner is a true entertainer ?
— ESPNcricinfo (@ESPNcricinfo) April 11, 2022
(via @davidwarner31 / IG) pic.twitter.com/xOyq4quipv
தெலுங்கு பட பாடல்களுக்கு நடனமாடுவதை வழக்கமாக வைத்துள்ள வார்னரின் புஷ்பா பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள வார்னர், ரசிகர்கள் கேட்டுக்கொண்டதற்காக என நகைச்சுவையுடன் குறிப்பிட்டு உள்ளார்.