“இதெல்லாம் சின்னப்புள்ள தனமா இல்லை'' - டேவிட் வார்னர் செய்த தவறு : வைரலாகும் வீடியோ

davidwarner ashesseries
By Irumporai Dec 09, 2021 08:37 AM GMT
Report

ஆஷஸ் தொடரில் டேவிட் வார்னர் செய்த விளையாட்டு தனமான தவறினால் ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கும் என இணைய வாசிகள் விமர்சித்து வருகின்றனர். உலகின் மிகவும் பிரபலமான ஆஷஸ் டெஸ்ட் தொடர் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி திணறி வருகிறது. இந்த நிலையில், டேவிட் வார்னரிடம் செய்த தவறு, விணையாக வந்து சேர்ந்துள்ளது. ஆட்டத்தின் 32வது ஓவரின் போது ஒல்லி ராபின்சன் வீசிய பந்தில் வார்னர் எட்ஜானார்.

ஆனால் 2வது ஸ்லிப்பாக நின்றுக்கொண்டிருந்த பேர்ன்ஸ் அதனை டைவ் அடித்தும் பிடிக்க தவறிவிட்டதால் வார்னருக்கு 2வது வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரின் ஸ்கோர் 49 ஆகும். அப்போது , வார்னர் செய்தது அதிர்ச்சி கொடுத்தது.

ஆட்டத்தின் 37வது ஓவரின் போது மார்க் வுட் வீசிய பந்தை சிங்கிள் தட்டிய, அவர், கெத்தாக சிங்கிள் ஓட கிறீஸை விட்டு வெளியேற் சென்றார். ஆனால் அந்த பந்தோ நேராக ஷார்ட் லெக் திசையில் இருந்த ஹமீத்திடம் சென்றது.

 இதனை அறியாது வார்னர் க்ரீஸை விட்டு வெளியேற, ஹமீத் ஸ்டம் அவுட் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் அனைவரும் எதிர்பார்த்த படி அங்கு ஒன்றுமே நடக்கவில்லை. பதற்றத்தில் இர்ந்த ஹமீத் பந்தை ஸ்டம்பிற்கு வீச தாமதம் செய்துவிட்டார்

வார்னரும் சென்ற வேகத்தில் திரும்பியதால் சறுக்கி விழுந்துவிட்டார். இதனால் பந்து முதலில் போகுமா? பேட் முதலில் போகுமா என்ற எதிர்பார்ப்பில் நூல்யிழையில் டேவிட் வார்னர் தப்பித்தார்.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி தற்போது இங்கிலாந்தை விட 142 முன்னிலை பெற்று விளையாடி வருகிறது. இதே போல வார்னர் செய்த சிறிய தவறுகள் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றன.