Monday, May 5, 2025

தனது 100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து வார்னர் சாதனை...! - குவியும் வாழ்த்துக்கள்...!

David Warner Viral Video
By Nandhini 2 years ago
Report

தனது 100-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் இரட்டை சதம் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த டேவிட் வார்னர்

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி விளையாடி வருகிறது.

இந்த இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நேற்று மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது.

இந்த டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னருக்கு இது 100-வது டெஸ்ட்டாகும். தனது 100வது டெஸ்ட் போட்டியை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டில் டேவிட் வார்னர் விளையாடினார்.

இந்த ஆட்டத்தில், டேவிட் வார்னர் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களின் பந்தை கிரிக்கெட் மைதானத்தில் அனைத்து பகுதிகளிலும் அடித்து நொறுக்கினார். இந்த ஆட்டத்தில் தனது 3வது இரட்டை சதத்தை எட்டினார். டேவிட் வார்னர் 254 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 200 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில், இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் நிகழ்த்திய இந்த சாதனையை, டேவிட் வார்னர் தனது 100வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து வரலாற்றில் 2வது பேட்ஸ்மேனாக சாதனைப்படைத்துள்ளார். 

இதனையடுத்து, இரட்டை சதம் அடித்த டேவிட் வார்னருக்கு அவரது ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். 

david-warner-100th-test-match-double-hundred