2022 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட சிறந்த வீரர் இவர் தான் - யார் தெரியுமா?
நடப்பாண்டு ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட மிகச்சிறந்த வீரர் யார் என்பது குறித்து முன்னாள் வீரரும், கொல்கத்தா அணியின் ஆலோசகருமான டேவிட் ஹஸ்ஸி கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கிய நடப்பாண்டு ஐபிஎல் தொடர் எதிர்பாராதவிதமாக பல சுவாரஸ்யமான நிகழ்வுகளுடன் சென்று கொண்டிருக்கிறது. முன்னாள், இந்நாள் சாம்பியன் அணிகள் எல்லாம் தடுமாற புதிதாக வந்த அணிகள் அசத்தலான வெற்றிகளை பெற்று வருகிறது. இதனால் எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது.
அதேசமயம் ஐபிஎல் ஏலத்தில் கோடிகளில் எடுக்கப்பட்ட வீரர்கள் தொடர்ந்து சொதப்ப குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பெங்களூரு அணியில் விளையாடி வந்த வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஏலத்தின் போது முதல் 2 சுற்றில் யாரும் எந்த அணியாலும் வாங்கப்படாத நிலையில், 3வது சுற்றில் கொல்கத்தா அணி அவரை அடிப்படை விலைக்கே ஏலம் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள உமேஷ் யாதவ் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி பர்ப்புல் கேப்பை பெற்றுள்ளார். இதன்மூலம் தன் மீதான விமர்சனங்களுக்கு அவர் பதிலடியும் கொடுத்துள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கொல்கத்தா அணியின் ஆலோசகரான டேவிட் ஹஸ்ஸி உமேஷ் யாதவ் குறித்து கருத்து ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிறந்த முறையில் வாங்கப்பட்ட தரமான வீரர் என்றால் அது நிச்சயம் உமேஷ்யாதவ் தான். அவர் சிறப்பான பார்மில் இருக்கும் இருப்பதால் நடப்பாண்டு சிறந்த வீரராகவும் திகழ்வார் என டேவிட் ஹஸ்ஸி கூறியுள்ளார்.
உமேஷ் யாதவ் கடைசியாக 2019 ஆம் ஆண்டு இந்திய அணியின் ஒருநாள் போட்டியிலும், 2018 ஆம் ஆண்டு டி20 போட்டியிலும் விளையாடிய நிலையில் அதன் பிறகு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இந்திய அணியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.