கொரோனா பாதித்த மாமனாரை முதுகில் தூக்கி சுமந்து நெகிழ வைத்த மருமகள்!

By Irumporai Jun 04, 2021 11:28 AM GMT
Report

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட தனது மாமனாரை மருத்துவமனைக்கு பாசத்தோடு தூக்கி சென்ற மருமகளின் செயல் பலரையும் வியப்படைய வைத்துள்ளது.

இந்த கொரோனா பரவல் நேரத்தில் சொந்த உறவுகளே கூட தொட்டுப் பேச முடியாத ஒரு சூழ்நிலைக்கு கொரோனா தற்போது நம்மைத் தள்ளியுள்ளது.

இந்த நிலையில் அசாம் மாநிலம் ராஹாவில் உள்ள பாட்டிகவானில் வசித்து வரும் துலேஷ்வர் தாஸ்( 75) இவருக்கு  சூரஜ் என்ற மகன் உள்ளார்.அவர் பணி நிமித்தமாக வெளியூர் சென்று விட்டார்.

இதனால் துலேஷ்வர் தாஸினை அவரது மருமகள் நிகாரிகா கவனித்து வந்துள்ளார்.

இந்த நிலையில்துலேஷ்வர் தாஸிற்கு  கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நி வீட்டில் உதவிக்கு யாரும் இல்லை.

கொரோனா காரணமாக உதவிக்கும் யாரும் வர முடியாத சூழ்நிலை  அதே சமயம் தனது மாமனாரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிலை நிகாரிகாவிற்கு  உருவானது.

அதனால் கொரோனா பாதித்த தனது 75 வயது மாமனாரை தன்னுடைய முதுகில் சுமந்து நிகாரிகா அருகில் இருக்கும் ராஹா மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

இதனால் அவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.  உள்ளூர் அதிகாரிகள் மாமனார் துலேஷ்வர் தாஸை மாவட்ட கோவிட் மருத்துவ மையத்துக்கு அனுப்புமாறு கூறினர்.

அதே வேளையில் மருமகள் நிகாரிகாவை வீட்டுத் தனிமையில் இருக்குமாறு ஆலோசனை வழங்கினர்.

ஆனால் மாமனாரைத் தனியே மருத்துவமனையில் விட மருமகள் நிகாரிகாவுக்கு மனம் வரவில்லை. 

தனது மாமனாரோடு அரசு மருத்துவமனைக்கு  சென்றுள்ளார்.

கொரோனா அச்சத்தில் இறந்த தந்தையின் உடலை ஏதோ குப்பை கூளம் போல் கொண்டு சென்ற மகன்கள் இருக்க,

தனக்கு கொரோனா வந்தால் என்ன ? தனது மாமனாரைக் காப்பாற்ற வேண்டும் என அவரை தோளில் சுமந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற மருமகள் நிகாரிகாவை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.