தாய் ஓட்டுப்போட சென்ற நேரத்தில் விபரீத முடிவை எடுத்த மகள்
சென்னையில் தாய் ஓட்டு போடா சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த கர்பிணி மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி வெங்கடேஷ்வரா நகர், 2-வது தெருவைச் சேர்ந்தவர் நீலவேணி (60) இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.
நீலவேணிக்கு மூன்று மகள்கள். மூன்று மகள்களை திருமணம் செய்து கொடுத்துவிட்டார். நீலவேணியின் மூன்றாவது மகள் ஷோபனா. இவருக்கும் வேளச்சேரி விஜயநகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்த தினேஷ்குமாருக்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. தற்போது ஷோபனா 4 மாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார்.
மேலும் ஷோபனா கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது அம்மா வீட்டில் தங்கியிருந்தபோது தற்கொலைக்கு முயன்றுள்ளார். அந்த சமயத்தில் அவரது தயார் அவரை காப்பாற்றியதோடு ஷோபனாவைக் கண்டித்துள்ளார். இந்தநிலையில் சட்டமன்ற தேர்தலையொட்டி நீலவேணி, ஓட்டு போட வாக்குசாவடிக்குச் சென்றார்.
அப்போது ஷோபனா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனையடுத்து வாக்கை செலுத்திவிட்டு வீடு திரும்பிய நீலவேணி வீட்டுக்கதவை தட்டியபோது கதவு திறக்கப்படவில்லை. மேலும் நீலவேணி அக்கம்பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து பார்த்தபோது,ஷோபனா தூக்கிட்டு நிலையில் தொங்கியுள்ளார்.
இதையடுத்து ஷோபனாவின் சடலத்தை மீட்ட வேளச்சேரி போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக நீலவேணி கொடுத்த புகாரின் பேரில் எஸ்.ஐ, கனகராஜ் வழக்கு பதிவு செய்து ஷோபனாவின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று விசாரித்து வருகிறார்.
திருமணமாகி 8 மாதங்களுக்குள் கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.