ஒருதலையாக காதலித்த சித்தப்பா..காதலை ஏற்காததால் மகள் கழுத்தறுத்து கொலை

Tamil Nadu Police Death Pudukkottai
By Thahir 3 நாட்கள் முன்

 மகள் முறை கொண்ட இளம் பெண் காதலை ஏற்காததால் சித்தப்பா கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒருதலை காதல் 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மயிலாடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா. இவரை அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர் துரைக்கண்ணு (வயது 35) என்பவர் காதலித்துள்ளார். ஆனால் முறைதவறிய காதல் என்பவதால் அவரை திருமணம் செய்ய பவித்ரா விரும்பவில்லை.

துரைக்கண்ணுவுக்கு பவித்ரா மகள் முறை வேண்டும். அத்துடன் துரைக்கண்ணுவைவிட பவித்ராவுக்கு 15 வயது குறைவு. தனது காதலை பவித்ரா ஏற்க மறுத்ததால் கடும் விரக்தியில் இருந்துள்ளார் துரைக்கண்ணு.

கழுத்தறுத்து கொலை 

இந்நிலையில் நேற்று முன்தினம் பவித்ராவின் வீட்டுக்கு சென்ற துரைக்கண்ணு, தனியாக இருந்த பவித்ராவின் கழுத்தை அறுத்து கொலை செய்ததுடன், வீட்டுக்கு சென்று தானும் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார்.

Daughter strangled to death for not accepting love

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.       

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.