பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரத் தந்தை... - பதற வைக்கும் பரபரப்பு சம்பவம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, அய்யம்பேட்டையைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (42 ). இவர் ஒரு கட்டிடத் தொழிலாளி.
இவருடைய மனைவி தேவி (35). இவர்களுக்கு ஶ்ரீகாந்த் (19) என்ற ஒரு மகனும், 11ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். செந்தில் குமாரின் மனைவி தேவி சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டார்.
இதனையடுத்து, செந்தில் குமார் தனது மகன் மற்றும் மகளுடன் ஐய்யபேட்டை குண்டு தெருவில் வாழ்ந்து வந்தார். மகன் ஸ்ரீகாந்த் கட்டிட வேலை செய்வதற்காக அடிக்கடி வெளியூருக்கு சென்று விடுவார். செந்தில்குமார் தினமும் மது குடித்து பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால், மது குடித்து விட்டு தினமும் அப்பகுதியில் இருப்பவர்களிடம் தகராறில் ஈடுபட்டும் வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மகள் தனியாக இருந்துள்ளார். அப்போது, செந்தில் குமார் மகளிடம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி யாரிடமும் சொல்லாமல் மகள் பயந்துக்கொண்டே இருந்துள்ளாள். ஆனாலும், தினமும் மகளிடம் செந்தில்குமார் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் தந்தையின் கொடுமை தாங்கிக்கொள்ளாமல் மகள் தன் அத்தையிடம் செந்தில்குமாரைப் பற்றி கூறியுள்ளாள். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அத்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்தப் புகாரின் பேரில், போலீசார் செந்தில்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, போலீசார் விசாரணையில், மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை ஒப்புக்கொண்டதையடுத்து, செந்தில் குமாரை போக்சோ சட்டத்தின் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
பெற்ற மகளுக்கே தந்தை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.