பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய காமக் கொடூரத் தந்தை - அதிர்ச்சி சம்பவம்
ஆலங்குடியில் பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கிய தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியை சேர்ந்தவர் சேகர் (55). மனைவி வேலைக்கு சென்ற நேரத்தில், தனியாக இருந்த மகளிடம் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
இதை வெளியில் சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால், பயந்து போன மகள் வெளியில் யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளாள்.
இந்நிலையில், தனியாக இருந்த மகளிடம், சேகர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனையடுத்து, திடீரென மகளுக்கு வயிற்று வலி வந்துள்ளது. அடிக்கடி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் தாய், மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளாள்.
அப்போது, பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள், உங்கள் மகள் 7 மாதம் கர்ப்பமாக உள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
இதனால், அதிர்ச்சி அடைந்த தாய், மகளிடம் விசாரித்தார். அப்போது, நடந்த எல்லாவற்றையும் மகள் கூற, அதிர்ச்சியில் உறைந்து போன தாய், உடனடியாக இது குறித்து ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரை பதிவு செய்த போலீசார், சேகரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சேகர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீர் வழக்கு பதிவு செய்து, ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
பெற்ற மகளையே பாலியல் தொல்லை கொடுத்து தந்தை கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.