ரஜினி, சிம்பு, சிவகார்த்திகேயன், யுவன் சங்கர் ராஜாவை வெளுத்து வாங்கிய ரசிகர்கள் - எதற்கு தெரியுமா?
தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர்தான் அன்புச்செழியன். இவர் ஒரு பைனான்சியர். அன்புச்செழியன் பல தயாரிப்பாளர்களுக்கு படங்கள் தயாரிக்க பைனான்ஸ் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று அன்புச்செழியன் மகள் சுஷ்மிதாவிற்கு திருமணம் நடந்தது. இந்த திருமண விழாவில் சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
நேற்று நடந்த திருமணத்தில் ரஜினி, கமல், சிவகார்த்திகேயன், சிம்பு, இளையராஜா, யுவன் சங்கர் ராஜா உட்பட பலர் தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இத்திருமணத்தின் புகைப்படங்கள் பல சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இதையெல்லாம் பார்த்த நெட்டிசன்கள்.. ஓ... இவர்களுக்கு இந்த திருமணத்திற்கு செல்ல மட்டும் நேரம் கிடைக்கிறதா என்று கடுமையாக விமர்சித்திதும், கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.
இதற்கு காரணம், கடந்த 19ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் ரஜினி, சிம்பு, சிவகார்த்திகேயன், யுவன் சங்கர் ராஜா ஆகியோர் வாக்களிக்க வரவில்லை. ஆனால் நேற்று நடந்த திருமண விழாவில் இவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
ஏனென்றால், சினிமாத்துறையில் அன்புச்செழியன் முக்கியமான நபர். எந்த படம் வெளியாக வேண்டுமென்றாலும் அவரின் உதவி தேவைப்படும்.
எனவே அவரின் உதவி தமிழ் சினிமாவிற்கும், தங்களின் படங்களுக்கும் வேண்டும் என்பதற்காக இந்த பிரபலங்கள் தவறாமல் திருமணத்தில் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.